
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியது. மும்பை அணியில் இருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பெங்களூர் அணிக்கு மாறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஹர்திக் மற்றும் குஜராத் அணிக்கு இடையே ஏதோ தவறு நடப்பதாக பேசப்படும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அவர் பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
நேற்று மாலை 5.25 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவித்தது. அதில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. இதனால் மும்பை ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.. ஆனால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவிக்க கடைசி நாள் டிசம்பர் 12 வரை வர்த்தக சாளரம் தொடர்கிறது. எனவே திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. மற்றும் நேற்று இரவு 7.25 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். இரண்டு உரிமையாளர்களிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் வராமல் இருந்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டரில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15.25 கோடி மட்டுமே மீதம் இருந்தது, குஜராத் அணி ஹர்திக்கிற்கு 15 கோடி கொடுத்தது. அதனால் மும்பையில் இந்த ஒப்பந்தம் செய்ய பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு ஆர்சிபி வாங்கியதன் மூலம் பணப்பையை அதிகப்படுத்தி, ஹர்திக்கை பெரிய தொகைக்கு தங்கள் அணியில் சேர்த்தனர். கேமரூன் கிரீன் மூலம் மும்பை இந்தியன்ஸ் பர்ஸில் 17.5 கோடி சேர்ந்தது. கேமரூன் கிரீன் ஆர்சிபியில் சேர்ந்ததை, அந்த அணி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் பக்கத்தில், இது பல அற்புதமான நினைவுகளைக் கொண்டுவருகிறது. மும்பை. வான்கடே. பல்டன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு தான் முதன் முதலில் மும்பை அணியால் வாங்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
— Mumbai Indians (@mipaltan) November 27, 2023
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் ஒரு பெரிய செய்தி வெளியாகவுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுள்ளார். ஹர்திக் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2015 இல் மும்பை இந்தியன்ஸிலிருந்து தொடங்கினார்.
ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா :
2022 ஆம் ஆண்டில், அவரது கேப்டன்சியின் கீழ், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அதன் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவும் ‘போட்டியின் ஆட்டநாயகனாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், குஜராத் டைட்டன்ஸ் இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, அங்கு அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸிடம் (சிஎஸ்கே) தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இந்த 2 சீசன்களிலும் ஹர்திக் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது என்பது தான் சிறப்பு.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா 30 இன்னிங்ஸ்களில் 41.65 சராசரி மற்றும் 133.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 833 ரன்கள் எடுத்துள்ளார். 8.1 என்ற எகானமி விகிதத்தில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா தற்போது காயமடைந்துள்ளதால், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியதில் மும்பை இந்தியன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. 2015-ம் ஆண்டு ஹர்திக்கை ரூ.10 லட்சத்துக்கு மும்பை வாங்கியது. ஹர்திக் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். ஹர்திக் ஐபிஎல் 2021 வரை மும்பையில் இருந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. எனவே ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட் ஆகியோரை தக்கவைக்க மும்பை முடிவு செய்தது. அதன்பின் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா..
This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023
HERE WE GO! 🔊
Australian explosive all-rounder, Cameron Green dons the Red & Gold for #IPL2024. 💪🤩#PlayBold #ನಮ್ಮRCB @CameronGreen_ pic.twitter.com/edv1D17MIj
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 27, 2023