பெங்களூரு அணி கிட்டத்தட்ட பாதி வீரர்களை வெளியேற்றினாலும் ஹேசல்வுட்டை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுகிறது.

ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையை கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றியுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் அரை டஜன் பவுலர்களை வெளியேற்றியுள்ளது. ஜோஷ் ஹேசல் வுட், ஹஸ்ரங்கா, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, பின் ஆலன், பிரேஸ்வெல் வெய்ன் பார்னெல், சித்தார்த் கவுல், கேதார் ஜாதவ், சோனு யாதவ், அவினாஷ் சிங் ஆகியோரை விடுவித்துள்ளது. முக்கிய பந்துவீச்சாளர்களில் சிராஜ் மட்டும் ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்த பந்து வீச்சாளர்களை வெளியேற்றிய பெங்களூரு, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை கைப்பற்றியுள்ளது.  

2023ல் மும்பை அணிக்காக கிரீன் விளையாடினார். 2022 ஐபிஎல் ஏலத்தில் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. சமீபத்திய வர்த்தகத்தின் மூலம் மும்பையிலிருந்து இந்த ஆஸி ஆல்ரவுண்டரை ஆர்சிபி வாங்கியது. ஏனெனெனில் பணம் குறைவாக இருந்ததால் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து வாங்கவே நன்றாக ஆடி வந்த கிரீனை ஆர்சிபி அணிக்கு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மும்பை அணி. இதனால் பெங்களூர் அணி மும்பை அணிக்கு 17.50 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

சில காலமாக ஆர்சிபி அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருந்த ஜோஷ் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோரை ஆர்சிபி பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. ஆர்சிபி அணிக்காக ஹஸ்ரங்கா 10.75 கோடிக்கும், ஹர்ஷல் படேல் 10.75 கோடிக்கும், ஹேசல் வுட் 7.75 கோடிக்கும் விளையாடினர். 

தற்போது இந்த மூவரையும் வெளியேற்றியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹசரங்கா காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். எனவே இதன் காரணமாக கூட அவரை நீக்கியிருக்கலாம். ஹர்ஷல் படேல் தனது முந்தைய லெவலில் பந்துவீச முடியவில்லை என்பதால் வெளியேற்றியிருக்கலாம். ஆனால் ஹேசல்வுட் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது, இவர் நடந்து முடிந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இந்த நட்சத்திர பந்து வீச்சாளர் மீது நம்பிக்கை இல்லை என தெரிகிறது. ஹேசல்வுட்டை தக்க வைத்திருக்கலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த மூவரையும் விட்டால் ஆர்சிபி அணிக்கு 30 கோடி மிச்சமாகும். அதே நேரத்தில் கிரீன் ஆர்சிபி அணியில் இணைந்ததன் மூலம் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் வலுப்பெற்றுள்ளது. அணியில் ஏற்கனவே கோலி, டுபிளெசிஸ், மேக்ஸ்வெல், படிதார் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். மேலும் கிரீன் வருகையால் ஆர்சிபி எந்த மாதிரியான முடிவுகளை பதிவு செய்யும் என தெரியவில்லை. துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் ஆர்சிபி யாரேனும் முக்கிய பவுலர்களை வாங்க திட்டமிட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.