
இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நடைமுறையில் இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 10 வந்தே பாரத் ரயில் சேவைகள் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும் நிலையில், தற்போது சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருக்கிறது. சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.