நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த கடுகு எண்ணெய் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல் ) ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் நிலையில் தற்போது கடுகு எண்ணெயில் விலை உயர்ந்ததால் அதற்கு பதிலாக மாதந்தோறும் வங்கிக் கணக்கில் 250 ரூபாய் மாநில அரசு செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மாதந்தோறும் 250 ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஹரியானா மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.