இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளை ஐஆர்சிடிசி அழைத்து செல்கிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் மற்றும் பயணிகளுக்கு வேண்டிய உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது ஐஆர்சிடிசி தக்ஷினா பாரத் சுபி யாத்ரா என்ற சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் பகுதியில் இருந்து மே 25-ஆம் தேதி புறப்படும்.

இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு 15500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் தென்னிந்தியாவில் உள்ள புனித தளங்களான ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி, ஸ்ரீசைலம் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த பயணத்தின் போது பயணிகளுக்கு வேண்டிய உணவுகள் அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். மேலும் பயணம் நேரத்தின் போது ஏதேனும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பயணிகள் ஈடுபடு நினைத்தால் அதற்கான செலவை மட்டும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.