ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள ரங்கபாரா வடக்கு ரயில்வே நிலையத்திற்கு அதிவேக‌ சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ், ஏசி இரண்டு டயர் கோச், 14 ஸ்லீப்பர் கோச், 4 ஜனங்கள் கொண்ட செகண்ட் கிளாஸ் கோச், இரண்டு லக்கேஜ் கோச் என மொத்தம் 23 கோச்கள் உள்ளது.

இந்த ரயில் ஈரோட்டில் இருந்து வருகின்ற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 2.20 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர், நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம் வழியாக ரங்கபாரா வடக்கு ரயில்வே நிலையத்தை சென்றடையும். இதே போன்று மறு மார்க்கத்தில்‌ மே 27 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு கிளம்பி ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும். மேலும் இந்த ரயிலில் செல்வதற்கான முன்பதிவு இன்று (மே 17) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.