தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு தற்போது டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற 14-ஆம் தேதி சுமார் 2763 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சென்றால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனையடுத்து தேர்வு எழுத வருபவர்கள் கண்டிப்பாக ஹால் டிக்கெட்டை உடன் கொண்டுவர வேண்டும். மேலும் tnpsc குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www. tnpscexams.com என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.