
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இது குடும்ப கட்சி அல்ல. திமுகவை போன்ற காங்கிரசை போன்று… இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளைப் போன்று.. இது குடும்ப கட்சி அல்ல. ஒரு குடும்பத்தால் நடக்கக்கூடிய கட்சி அல்ல… வியாபாரத்திற்காக நடத்துகின்ற கட்சி அல்ல.. மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கின்ற இயக்கமல்ல…
திமுகவைப் போல தாத்தா, அப்பா, பேரன், கொள்ளு பேரன், பேத்தி, பொண்ணு என்று குடும்ப கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இயக்கம் தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கம். MGRஆல் தொடங்கப்பட்டதல்ல, தொண்டர்கள் தொடங்கிய இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்….
தொண்டர்களால், மக்களுக்காக… தொடங்கப்பட்ட இயக்கம் அனைத்தைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யார் வேண்டுமானாலும், எந்த பொறுப்புக்கு வேண்டுமானாலும் வரலாம். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி… இங்கே பேசிக் கொண்டிருக்கின்ற நான் நாளைக்கு கீழே போகலாம்.
கீழே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் நாளைக்கு இங்கே வந்து மேடையில் பேசிக் கொண்டிருக்கலாம். இந்த கட்சியில் யார் எந்த பொறுப்புக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம், கனவு காணலாம், அது நிறைவேற்றிக் கொடுக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இதனை சாதித்து காட்டி இருக்கிறது என தெரிவித்தார்.