போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  NPCI ஆனது UPIல் பணம் செலுத்தும் செயல்முறையை மேலும் எளிதாக்கியுள்ளது. இனிமேல் ஸ்கேன் செய்யவேண்டாம், ‘ஹலோ யுபிஐ’ குரல் கட்டளைகளின் உதவியுடன் GPay, phonepe, Paytm போன்ற UPI பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது இந்தி – ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த வசதி, விரைவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் விரிவுப்படுத்தப்படவுள்ளன. UPI Lite X அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் ஆஃப்லைனிலும் பணத்தை மாற்றலாம் – பெறலாம்.