யுபிஐ (UPI) மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளில் இருக்கும் ‘Request Money’ அம்சத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக நீக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. தற்போது பல்வேறு யுபிஐ மோசடிகளில் Request Money அம்சம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனால், வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பை முன்னிட்டு, இந்த அம்சத்தை முற்றிலுமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேசமயம், NPCI ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை ஏற்கனவே அமல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பரிவர்த்தனை வரம்பு, அங்கீகார முறைகள், மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இப்போது, Request Money நீக்கம் அந்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
