தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. நேற்று ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைக்காக அந்த பேக்கரிக்கு சென்று முட்டை பப்ஸ் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து சிக்கன் பப்ஸை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பப்ஸில் இறந்த குட்டி பாம்பு இருந்ததை கண்டு ஸ்ரீசைலா அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அதை எடுத்துக் கொண்டு பேக்கரிக்கு சென்று உரிமையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.