google நிறுவனத்தின் ஜிபே மொபைல் ஆப், யு.பி.ஐ பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்த உதவுகிறது. மேலும் ஜிபே ஆப் வழியாக டிஜிட்டல் தங்கமும் வாங்கிக் கொள்ளலாம். ஜிபே ஆப்பில் MMTC-PAMP நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் 99.99 சதவீதம் சுத்தமான 24 கேரட் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் வாங்கும் தங்கம் Gold Accumulation plan திட்டத்தின் கீழ் சேமிக்க வைக்கப்படுகிறது. உங்களின் டிஜிட்டல் தங்கத்திற்கு 100% இன்சூரன்ஸ் இருக்கிறது. இதனால் உங்களது தங்கம் பாதுகாப்பாக இருக்கிறது.

Gpay: ஜிபே ஆப்-இல்  தங்கம் வாங்குவது எப்படி.?

1. உங்கள் மொபைலில் ஜிபே ஆப் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

2. இப்போது மொபைலில் ஜிபே ஆப் திறக்கவும்.

3. அதில் நியூ கிளிக் செய்யவும்.

4. Search bar ல் gold locker என தேடவும்.

5. அதில் gold locker கிளிக் செய்யவும்.

6. பின்  Buy கிளிக் செய்யவும்.

7. இதனையடுத்து  தங்கத்தின் தற்போதைய சந்தை விலை காட்டப்படும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இதே விலை இருக்கும்.

8.நீங்கள் எவ்வளவு தங்கம் வாங்க வேண்டும் என்பதே ரூபாய் மதிப்பில் பதிவிட வேண்டும். உதாரணமாக 500 ரூபாய் என பதிவிட்டால் 500 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம் நீங்கள் ஒரு ரூபாய் கூட தங்கம் வாங்க முடியும்.

9. இப்போது ✓ கிளிக் செய்யவும்.

10. அதன் பின்  பணத்தை செலுத்த வேண்டும்.

11. பணப்பரிவினை உறுதி செய்யப்பட்ட பின்பு உங்கள் gold locker-ல் நீங்கள் வாங்கிய தங்கம் இருக்கும்.