கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான அக்ஷய் மஷேல்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சைதன்யா பியூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சிக்ஷா என்ற மனித வடிவ ரோபோவை கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோ 4-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திறன் கொண்டது. கொரோனா காலகட்டத்தின் போது மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கிய நிலையில் செல்போன் வாயிலாக படித்தனர்.

இதனால் மாணவர்களின் வாழ்க்கை திறன் மாறிய நிலையில் என்னதான் செல்போன் மூலமாக படித்தாலும் ஆசிரியர்கள் நேரடியாக கற்றுக் கொடுப்பது போன்று வராததால் தற்போது சிக்ஷா என்ற ரோபோவை கண்டுபிடித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அக்ஷய் கூறியுள்ளார். மேலும் சிக்ஷா என்ற மனித வடிவ ரோபோ தற்போது பாடம் எடுப்பதற்கு தயாராக இருக்கும் நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவில்லை எனவும் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அக்ஷய் கூறியுள்ளார்.