தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி பழைய பேருந்து நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த ஐந்து மாடு, ராமேஸ்வரம் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடு, மருத்துவக் கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடு என்ன மொத்தம் 18 மாடுகள், 2 கன்று குட்டிகளை மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி தலைமையில் அலுவலர்களும், பணியாளர்களும் பிடித்து காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுவரை மாநகரில் 71 மாடுகளையும் 44 கன்று குட்டிகளையும் பிடித்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்படும் என மாநகர் நல அலுவலர் கூறியுள்ளார்.