மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ளை பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு வழங்கியது. இதுகுறித்து முதலமைச்சர் சட்ட சபையில் கூறியதாவது பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இந்த புயல் மீட்பு பணிகளுக்கு 6675 கோடி என்று மதிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்கள் ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் சில திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை அரசுக்கு இருக்கிறது ஆனால் நிதி இல்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார் அந்த நிலைதான் தற்போது உள்ளது.

கடந்த 2011 முதல் 21 வரையிலான பாதாளத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்துள்ளோம். தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் முடங்கியுள்ளது. ஒருங்கிணைத்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம் இதுவரை நிதி தொகையை கொடுக்காத காரணத்தினால் மாநில அரசு தனது சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. இதுதான் தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

வீடு தோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் 4142 கோடி மதிப்பை அரசு வழங்க வேண்டும் ஆனால் 732 கோடி மட்டும்தான் வழங்கியது. மத்திய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிக்கின்றது. இதனால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியவில்லை. மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவளித்து அதிமுக துரோகம் இழைத்தது. டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதலமைச்சர்கள் பதவியில் இருக்க மாட்டேன், தொடர்ந்து இந்த திட்டத்தை குறித்து பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக உறுதியாக சொல்கிறேன் நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று அவர் தெரிவித்தார்.