அமெரிக்காவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் காசா- இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையில் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கொலம்பியா கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்க முடிவு செய்துள்ளது. அந்த முடிவின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

ஏனெனில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூபாய் 3400 கோடி நிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டதை தொடர்ந்து பல்கலைக்கழகம் இந்த முடிவை மேற்கொண்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்போது கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக முடிவெடுத்துள்ளதாகவும், ஏற்கனவே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உள்ளதால் அதற்கு இழப்பீடாக அமெரிக்க அரசுக்கு ரூபாய் 1700 கோடி செலுத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், வரும் வாரம் இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து கொலம்பியா பல்கலைக்கழகம் அடுத்தடுத்து அரசுக்கு சாதகமான முடிவு எடுத்து வருவதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்து வருகின்றனர்.