உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகவுள்ள கூகுள், தன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வந்தது. இதன் காரணமாக இந்நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே ஐடியில் பணியாற்றும் இளைஞர்களின் கனவு. சமீப காலமாக அந்நிறுவனம் எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

ஏனெனில் சமீபத்தில் ஆட்குறைப்பு செய்த கூகுள் அடுத்ததாக ஊழியர்களின் சலுகைகளில் கைவைத்திருக்கிறது. ஆடம்பர செலவுகளை குறைக்கும் பொருட்டு இத்தனை நாள் ஊழியர்களுக்கு வழங்கி வந்த பல சலுகைகளையும் நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. அந்த வகையில் ஊழியர்களுக்கு வழங்கி வந்த நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள் மற்றும் சலவை சேவைகள், மசாஜ், மதிய உணவு போன்றவற்றை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. இது அந்நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.