புது 5G போனை நீங்கள் தேடுகிறீர்கள் எனில், மலிவு விலையில் கூகுள் போனை வாங்கலாம். Pixel 6a இப்போது பெரிய தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இந்த போனுக்கு மிகப் பெரிய ஆஃபர் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக நத்திங் ஃபோன் (1), OnePlus 11R மற்றும் Samsung Galaxy A54 5G மொபைலுக்கு இணையான விலையில் வாங்கிக்கொள்ளலாம். பிளிப்கார்டில் கூகுள் பிக்சல் 6a இப்போது ரூ.28,999-க்கு கிடைக்கிறது.

எனினும் இந்த விலையை வாடிக்கையாளர்கள் மேலும் குறைக்கலாம். அதாவது உங்களிடம் சிட்டி கிரெடிட் கார்டு இருப்பின், முன்பணம் (அ) இஎம்ஐ கட்டணங்களில் ரூ.1,500 வரை தள்ளுபடி பெறலாம். இதன் காரணமாக விலை ரூ.27,499 ஆக குறைந்து உள்ளது. அதோடு பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (அ) இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.1,000 வரை தள்ளுபடியை பெறலாம்.