அமெரிக்க நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகிறது. இதில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் H1B விசாக்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு கிரீன் கார்டு அவசியம். இந்த கிரீன் கார்டை பெறுவதற்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டு பெறுவதற்கு காலதாமதம் ஆகும். இதனால் ஒவ்வொரு வருடமும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தின் போது கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு employment Authorization card வழங்கலாம் என்று அமெரிக்க அதிபருக்கான ஆலோசனைக் குழு யோசனை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பதோடு திறமையான பலர் அமெரிக்காவிற்கு வேளைக்கு வருவதால் நாட்டின் வளர்ச்சியும் மேம்படும். மேலும் இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பை டன் ஒப்புதல் வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.