அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல தீபாவளி பண்டிகையும் வெகு விமர்சையாக இந்துக்களால் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில்அமெரிக்காவின் பென்சில்வேனியா தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்துள்ளது.

பென்சில்வேனியாவில், கிட்டத்தட்ட 2 லட்ச இந்திய அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள். இதனால், அங்கு தீபாவளியை கொண்டாட அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.