இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதே மிகவும் கடினமாகிவிட்டது. பிறந்த குழந்தை கூட செல் போன் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுகிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் இணைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சிறுவர்கள் facebook, இன்ஸ்டா மற்றும் டிக் டாக் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க முடியும். குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.