தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் கடைசி நாளான இன்று இயங்கும் என்ற தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த மாதத்திற்கான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்காத அட்டைதாரர்கள் கவலைப்பட வேண்டாம். மேலும் அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை அந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.