இந்திய ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தின் காரணமாக தொடர்ந்து விகிதத்தை உயர்த்தி வந்தது. இதனால் 6.5 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் 6.1 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதன் காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் ஜூன் 6-8 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தால் இஎம்ஐ வாங்கியவர்களுக்கு கடன் சுமையும் குறையும்.