தீபாவளியை முன்னிட்டு சென்னையில் குடியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரயில்கள் மூலம் மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் சென்னை வழக்கமான பரபரப்பு இன்றி காணப்படுகிறது. இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப அவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது, தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் வசதிக்காக 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தினம்தோறும் இயங்கி வரும் 2092 பேருந்துகளுடன் 3165 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களில் இருந்து 3405 பேருந்துகளும் என மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும். எனவே பேருந்தில் பயணிக்க, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து, முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.