அமெரிக்க நாட்டில் கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து, உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிராசோஸ் என்னும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம்கர்நாத் என்ற இந்து மக்களின் கோவிலில் தினமும் வழிபாடு நடத்தப்படும். இந்நிலையில், அந்த கோவிலில் இரவு நேரத்தில் ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அதன் பிறகு, அந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்த பாதுகாப்பு பெட்டகம் மற்றும் உண்டியலை எடுத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.