கரூர் மாவட்டத்தில் உள்ள முனிநாதபுரம் பகுதியில் மருதாயி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 பேர் டீ கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் மருதாயியிடம் “பண் தாருங்கள்” கேட்டுள்ளார். இதனால் கவரில் இருந்து மருதாயி பண்ணை எடுத்துக் கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.