தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அரூர் அருகே கோபிநாதம்பட்டியில் வாரம் தோறும் நடைபெறும் கால்நடை சந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான ஆடுகளும் மாடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன.
சில மணி நேரங்களில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையானது. ஒவ்வொரு மாட்டுக்கும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை விலை நிர்ணயிக்கம்பட்டிருந்தது.