
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, 2017 என் மகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்தாங்க. வந்தது பாருங்க நீட்…. எண்ணாகி விட்டது ? கேட்கிறார் என் பொண்ணு ? சொன்னியே அப்பா சீட்டு வாங்கி கொடுக்கிறேன் என்று….. உன்னை நம்பி தானே நான் ஸ்டேட் போர்டு படித்தேன். ஸ்டேட் போர்டுல நல்ல மார்க் வாங்கிட்டேன். இப்போ எனக்கு மெடிசன் சீட்டு வாங்கி கொடு ? என என் மகள் கேட்டால் ? கண்கலங்கி நின்றேன்.
என் இயலாமையை பார்த்து கண்கலங்கி நின்றேன். ஏனென்றால், என் சொந்த மகளுக்கு என்னால் ஒரு மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி கொடுக்க முடியாத நிலை. என் மகள் நீட் எழுதினார்கள். ஆனால் தேர்வு பெற முடியவில்லை. காரணம் என்றால், ஸ்டேட் போர்டு படித்துவிட்டு…. சிபிசிஎஸ்சிக்கு முடியாது. அதனால் பிராக்டிக்கலாக அனுபவித்த பெற்றோர்.
சகோதரி மருத்துவர் கனிமொழி வந்து சொன்னார்கள்… அண்ணே…! நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க அண்ணா ? வாய்ப்பு இருக்கு… ஒரு விலக்கு இருக்கு… இந்த ஆண்டு ( 2017) மட்டும் நீட்டிற்கு வெளிநாடு சென்று படிக்கலாம். நீங்க ஒரு வழக்கு போடுங்கள்… எல்லா பெற்றோரும் வழக்கு போடுங்க… நானும் வழக்கு போட்டேன்…. என் மகள் மலேசியா சென்று…. மருத்துவ படிப்பு முடித்து… நேற்று தான் அவள் வெற்றி பெற்றால் என்று முடிவு வந்தது.
அப்போது போது சொன்னேன்…. ஐந்து ஆண்டுகளாக நான் கஷ்டப்பட்டேன்…. இதே மாதிரி தானே அனிதா அண்ணன் மணிரத்தினம் கஷ்டப்பட்டு இருப்பார். என்னால் முடிந்தது… ஆனால் இந்த நிலை மாற வேண்டாமா ? நம்ம ஊரில் கலைஞர், மாவட்டம் மாவட்டமாக ஒரு மருத்துவக் கல்லூரி வைத்திருக்கிறார். எதற்கு ? சென்னை போய் படிக்கணும்… மதுரை போய் படிக்கணும்… டவுனில் போய் படிக்கணும்… நீ டவுனில் எல்லாம்ம் படிக்க வேண்டாம். உன் ஊரில் படிக்கலாம்.
ஏன் இந்த நீட்டை கொண்டு வருகிறார்கள் ? எதற்கு நீங்க படிக்க கூடாது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நமது தங்கம் தென்னரசு.. நிதி அமைச்சர்… அழகான உரையை சட்டமன்றத்தில் நிகழ்த்தினார். தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், திருப்பி அவர்கள் 28 காசு தான் தருகின்றார்கள். அப்போ 78 காசு எங்கே போகிறது ?
உத்திரப்பிரதேசம் செலுத்திகின்ற ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய் திரும்பி வருகிறது. என்ன நியாயம் ? நாங்கள் நல்லா படிக்கிறோம்… நல்லா வேலை செய்கிறோம்…. நாங்க ஒரு ரூபாய் வரி கொடுத்தால், ஒரு ரூபாய் திருப்பி கொடுக்கணும். இல்ல 80 சதவீதம் கொடுக்கணும்… 28 காசு தான் தாறாங்க. ஆனால் உத்தர பிரதேசம் ஒரு ரூபாய் கொடுத்தால், இரண்டு ரூபாய் கொடுக்கிறார்கள்.
காரணம் என்னெவென்றால் ? மிகவும் பின் தங்கிய மாநிலம் உத்தரபிரதேசம். அதை நாங்கள் முன்னேற்ற வேண்டும். நீங்கள் முன்னேறி விட்டீர்கள். பிரச்சனை சிம்பிள் தான் … நீங்க எல்லாம் சென்னையில் தான இருக்கிறீர்கள். நீங்க எல்லாம் திநகர் போங்க. அங்க இந்தி பிரச்சார சபா என இருக்கிறது. யாரு காசு ? நம்ம காசை எடுத்துக்கொண்டு, நமக்கே ஆப்பு அடிக்கின்றார்கள்.
தமிழ் மொழி வளர்க்க முடியாதா ? நான் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டேன். ஐயா தமிழுக்கு செம்மொழி வந்துவிட்டது… செம்மொழி தெலுங்கு, கன்னடம் இருக்கு . இதுக்கு எவ்வளவு செலவு பண்ணுனீங்க ? சமஸ்கிருதத்திற்கு 688 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். யாரும் பேசாத மொழி… பேசப்படாது… பேசினால் தீட்டு… பேசப்படாத மொழிக்கு 688 கோடி செலவு பண்ணுகிறார்கள். ஆனால் செம்மொழியான நமக்கு வெறும் 28 கோடி தான் செலவு பண்ணுகிறார்கள். இதை நான் கேட்டேன் என தெரிவித்தார்.