திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம் படிக்க கூடாது. சமத்துவம் கிடையாது. நீ கீழ் ஜாதி, நீ சூத்திரன். நீ படிச்சு என்ன செய்ய போற ? தாங்கள் மட்டும் தான் படிக்க வேண்டும்…  தாங்கள் மட்டும் படித்து மேலே வரணும்…  நமக்கு ஆயிரத்தி எட்டு  பிரச்சனை… நீட் தானேப்பா.. நம்ம பிள்ளை நீட் படிக்கப் போவதில்லை…. அதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ?  என் பையன் இன்ஜினியரிங், அவன் BCOM என கண்டுக்காமல் இருக்கின்றார்கள்.

ஆனால் பிரின்ஸ் கஜேந்திரன் சொன்னார். மெதுவாக ஆட்டை கடித்து…. மாட்டை கடித்து… மனுஷனை கடிக்கின்ற  காலம் வரப்போகிறது…. அனைத்திற்கும் நுழைவு தேர்வு என்ன பண்ணுவீர்கள் ?  இப்போ நீங்கள் மாணவர்கள்… நீங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளில் பெற்றோர்களாக மாறிவீர்கள்… மாறிய பிறகு,

உங்கள் குழந்தைக்கு என்ன பண்ண வேண்டும் ? வந்துவிடும்…  காமன் நுழைவு தேர்வு  வந்துவிடும். என்ன பண்ணுவீர்கள் ? வேறு வழியே இல்லையா..?  கடந்த வாரம் ஒரு காணொளி வைரலாக பரவுகிறது. என்ன காணொளி என்றால் ? கஸ்டம்ஸில் கேண்டீனில் வேலை 8 பேருக்கு…  ஆனால் அப்ளை பண்ணுது 1200 பேர். பார்த்தீர்கள் என்றால் ? பெரிய முறைகேடு… என்ன பண்ணுகிறார்கள் ? உத்தரபிரதேசம், பீகார், வட இந்தியர்கள்  இங்கு வந்து தேர்வு எழுதுறாங்க.  எனக்கு புரியாதது என்னவென்றால் ?

அவுங்க சொந்த மாநிலத்தில் எழுதாமல்,  சென்னையில் வந்து எழுதுகிறார்கள். காதில் இயர் போன் ஒட்டிக் கொள்கிறார்கள்… ப்ளூ டூத் வைத்து 100 கணக்கானவர்களை கைது செய்தார்கள். அப்போது சந்தேகம் வருமா ? வராதா ? நம்ம பிள்ளைங்க நீட் எழுதுகிறார்கள்.. என்ன பண்ணார்கள் ? உங்களை ஆடையை கழத்ததா அளவுக்கு ஸ்கேன் செஞ்சாங்க.. தொட்டு தொட்டு எல்லாவற்றையும் அவ்வளவு ஸ்ட்ரிட்டா பண்ணினார்கள்.

எக்ஸாம் எழுதுவதற்கு முன்னாடியே  உங்களின்  மனநிலையை குறைக்க செய்தார்கள். அங்கே பார்த்தால்,  பள்ளிக்கூடத்தில் எழுதுகிறார்கள்… பெற்றோர்கள் எல்லாம் சுவற்றை  பிடித்துக்கொண்டு…  பிள்ளைக்கு காப்பி அடிக்க சொல்லிக் கொடுக்கிறார்கள்… சந்தேகம் வருமா?  வராதா ? அங்கே உண்மையாக படித்துதான் நீட் எழுதுகிறார்களோ,  இல்லை படிக்காமல் நீட்  எழுதுகிறார்களா ?அதை சொல்வதில்லை…

நாங்க அமெரிக்கா சிஸ்டம் கொண்டு வருகிறோம்…. ஐயா நீங்கள் என்ன சிஸ்டம் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் ? 2000ஆண்டுகளாக படிக்க விடாத எங்க பிள்ளைகள் இப்போது தான் படிக்க வருகின்றார்கள், அவர்களை படிக்க விடுங்கள்.  அவர்கள் படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். நீங்கள் முன்னுக்கு வந்து என்ன செய்தீர்கள் ? எதுவுமே செய்யவில்லை… நாட்டை பின்னுக்கு தானே தள்ளினீர்கள்.

மோடி பெரிய துரோகம் செய்கிறார்கள்.  தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இங்க இருப்பவர்களிடம் ஒண்ணே ஒன்னு கேட்கிறேன். ஏன் நம்ம மொழியை  தாய்மொழி என்கிறோம் ?  மொழியை அவமதிப்பது பெற்ற தாயை அவமதிப்பதற்கு சமமா ? அதுதான் தாய்மொழி. இந்திய சுதந்திரம் அடைந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் மார்வாரி மொழி எத்தனை சதவீதம் பேசினார்கள் என்றால் ? 97 சதவீதம் பேர் மார்வாரி மொழியை பேசினார்கள்.