விலங்குகளிலேயே அதிக அறிவு கூர்மையும், மனிதர்களிடம் மிகுந்த பாசமும் கொண்டவை யானைகள். அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோவில் ஒரு யானை தனது பராமரிப்பாளருடன் விளையாடும் காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
ஒரு பிஞ்சு குழந்தையைத் தனது தந்தை சைக்கிளில் அழைத்துச் சென்றால், அந்த குழந்தை எப்படியெல்லாம் அடம் பிடிக்குமோ, அதேபோல இந்த யானையும் செய்கிறது.
A heartwarming moment between a rescued elephant and his caregiverpic.twitter.com/ef7Ni8cIeM
— Massimo (@Rainmaker1973) January 26, 2026
தனது பராமரிப்பாளர் சைக்கிளை எடுத்தவுடன், அந்த யானை அவரை விடாமல் வழிமறிக்கிறது. ‘நானும் சைக்கிளில் வருவேன்’ என்பது போலத் தனது தும்பிக்கையால் சைக்கிளைப் பிடித்து இழுப்பதும், அதன் மீது ஏற முயற்சிப்பதுமாக அந்த இடத்தையே கலகலப்பாக்குகிறது.
அந்த யானையின் உருவத்திற்கும், அது செய்யும் மழலைத் தனமான சேட்டைக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை என்பது போல மிக அழகாக அந்த காட்சி அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். “யானைகள் எப்போதும் குழந்தைகள்தான்” என்றும், “பராமரிப்பாளர் மீது அந்த யானை வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாதது” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
