சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து அதிரடி காட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோவில், காளை மாடு ஒன்று திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறது. உள்ளே சென்றதும் மிரண்டு போன அந்த மாடு, அங்கிருந்த கண்ணாடி அடுக்குகளைத் தனது கொம்பால் முட்டி உடைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Blue Ridge Breaking News (@blueridgebreakingnews)

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் விழுந்து சிதறுகின்றன. மாட்டின் ஆக்ரோஷத்தைப் பார்த்து அங்கிருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பயந்து போய் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “மாட்டுக்கு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்றும், “ஷாப்பிங் செய்ய வந்த இடத்தில் யாராவது வம்பு இழுத்திருப்பார்களோ?” என்றும் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.