சமூக வலைதளங்களில் எப்போதுமே கணவன் – மனைவி இடையிலான நகைச்சுவை வீடியோக்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ எக்ஸ் (Twitter) தளத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மனைவிக்கு உதவியாக அமர்ந்து பெரிய கறை படிந்த இரும்பு வாணலியை (Kadhai) தேய்த்துக் கழுவிக் கொண்டிருக்கிறார்.
लगता है भाई की लव मैरिज है
🤣🤣 pic.twitter.com/AGbzFnoMWC— तैमूर का जीजा 😎 🇮🇳 (@brijeshchaodhry) January 25, 2026
அவர் பாத்திரம் கழுவுவதை யாரோ வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்த நபர், ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் தனது வேலையில் மும்முரமாகி விடுகிறார்.
இந்த வீடியோவை பிரிஜேஷ் சவுத்ரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பார்த்தா லவ் மேரேஜ் போலத் தெரியுது” என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “நிச்சயமாக இது 1000% லவ் மேரேஜ் தான், அதனால்தான் இவ்வளவு சிரத்தையாகப் பாத்திரம் கழுவுகிறார்” என கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர், “மனைவிக்கு உதவுவது நல்ல விஷயம் தான், ஆனால் இவரைப் பார்த்தால் ‘மனைவிக்கு அடங்கியவர் போலத் தெரிகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
