இன்று கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எனினும் அதை சுத்தம் செய்வது தான் மிகப் பெரிய வேலையாக இருக்கும். சமைக்கையில் சிதறும் எண்ணெய், பொங்கி வழிவது ஆகியவற்றால் அந்த பர்னரே அழுக்காகிவிடும். இதனால் அடுப்பு சரியாக எரியவும் செய்யாது. இந்த பர்னரை சுத்தம் செய்வது மிகப் பெரிய வேலைதான். தற்போது கேஸ் பர்னரை ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

அதாவது, கேஸ் பர்னரை கழட்டி அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய கப் அளவிற்கு அமுானியாவை சேர்த்து கவரை நன்கு கட்டி இரவு முழுக்க அப்படியு வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்து பார்த்தால் பர்னர் பளிச்சென்று புதியது போன்று இருக்கும். பின் பர்னரை தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து பயன்படுத்துங்கள்.

அதேபோல் பேக்கிங் சோடாவுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு கறை படிந்த பர்னரை தேய்க்க வேண்டும். அதன்பிறகு வெந்நீரில் போட்டு ஊறவிட்டு கழுவினால் பர்னர் பளிச்சென்று மாறிவிடும். மேலும் ஒயிட் வினிகரில் அரைமணி நேரம் வரை ஊற வைத்து பிறகு அதை நன்கு ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் பர்னரில் உள்ள கறைகள் முழுவதும் நீங்கி புதுசு போன்று இருக்கும்.