காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரம்மன், சரஸ்வதி மற்றும் திருமால், மகாலட்சுமி இணைந்து சிவனை வழிபட்டது, விநாயகர், பைரவர், துர்க்கை, சூரியன், அய்யனார் ஆகியோரும் சிவனை வழிபட்ட பெருமைக்குரிய தளமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து கோவில் திருப்பணி குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், செயலாளர் ஆகியோர் கூறியதாவது, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என கூறியுள்ளனர்.