திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களாக பக்தர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதிலும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முருகன் பக்தர்கள் ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

இதனால் கருங்கல்பாளையம் காவிரி சாலை, ஆர்.கே.பி சாலை, பன்னீர்செல்வம் பூங்கா, காந்திஜி சாலை, மூலப்பாளையம்- பூந்துறை சாலை வழியாக முருக பக்தர்கள் காவடி எடுத்து நடந்து செல்கின்றனர். வழி நெடுக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரகுபதி நாயக்கன்பாளையத்தில் பக்தர்கள் குளிப்பதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்காக தனி இட வசதி செய்யப்பட்டது.