சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்ஜிஆர் என திருமாவளவன் கூறிய சர்ச்சையான கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, எம்ஜிஆர் இன்றுவரையிலும் பொது மக்களின் தெய்வமாகவே கருதப்படுகிறார்.

அவர் குறித்து திருமாவளவன் பேசுவது வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதுபோன்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது விவசாய தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தியது.

அதிமுக சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி எனக் கூறினார். மேலும் பேசிய அவர் திமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு , அவர்களது கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது வரும் 8 மாதத்தில் தெரிந்துவிடும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் எனக் கூறினார்.