சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் நாகநாதன். துணை இயக்குனர் ராகவன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன் கவுன்சிலர்கள் உதய சண்முகம், ஹரி சரண்யா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வும் நோய் தடுப்பு மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளது.