தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி., ஹவில்தார் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பாட குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதில் சேர விருப்பம் இருப்பவர்கள் https://bit.ly/3XRC17y என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.