இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும் நிலையில் தற்போது இந்திய வரலாற்றில் முதல் முறையாக கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்தியாவில் முதல் முறையாக கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டரில் சுரங்கப்பாதை இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை நீரின் மேற்பரப்பிலிருந்து 32 மீட்டர் ஆழத்தில் கீழே நிலப்பரப்பில் இருக்கிறது.

இந்த சுரங்க பாதையின் முழு நீளம் 10.8 கி.மீ நிலத்தடியில் இருக்கிறது. நாட்டின் முதல் ஆழமான மெட்ரோ ரயில் பாதையாக இருக்கிறது. நீருக கடியில் ஒரு நிமிடத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயில் செல்லும் என்பதால் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நேற்று நீருக்கடியில் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். சோதனை ஓட்டம் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்ததால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவைகள் நீருக்கடியில் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.