பெண் தொழில்முனைபவர்களுக்கு முத்திரை வரி கிடையாது என இந்திய மாநிலங்களில் ஒன்று அறிவித்து உள்ளது. எனினும் மாநிலம் முழுவதும் ஒரே சீராக இந்த சிறப்பு விலக்கு இருக்காது. உத்தரப்பிரதேசம் அரசு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் புந்தேல்கண்ட் பகுதியில் 100 சதவீதமும், மத்திய மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 75 சதவீதமும், கவுதம் புத்த நகரில் 50 சதவீதமும், பெண் தொழில்முனைவோருக்கு 100 சதவீதமும் முத்திரை வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் அரசு, தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் தலைமைத்துவம் மற்றும் வளர்ச்சி இயந்திரத்தின் வளர்ச்சிக்கான நிறுவன திட்டத்தின் கீழ் தொழில்துறை நிலத்தை வாங்கும் (அல்லது) குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100% விலக்கு அளித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. முத்திரை மற்றும் பதிவுத் துறை  முதன்மை செயலாளர் லீனா ஜோஹ்ரி இதற்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.