வங்கிக்கு போகாமலேயே விரைவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் UPI வழியாகவே செய்து கொள்கின்றனர். இல்லையெனில் நெட்பேங்கிங்கை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு வங்கிப் பண பரிவர்த்தனை என்பது ஆன்லைன் மயமாகி விட்டது. UPI பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனில் அதன் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு யுபிஐ பின் உருவாக்க வேண்டும். ஒருவேளை உங்களது UPI பின் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டது எனில் மாற்றிவிடுங்கள்.

அவ்வாறு மாற்ற முற்படும் நேரத்தில் உங்களிடம் டெபிட் கார்டு இல்லையென்றாலும் யுபிஐ பின்னை பத்திரமாக மாற்றிக்கொள்ளலாம். தற்போது யுபிஐ பின்னை டெபிட் கார்டு இன்றி மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதன்படி உங்களது  வங்கியின் மொபைல் ஆப் (அ) இன்டர்நெட் பேங்கிங் போர்டல் வாயிலாக உள்நுழைய வேண்டும்.

உங்கள் கணக்கு அமைப்புகளுக்கு சென்று UPI பின் விருப்பத்தை கண்டறிய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய பின்னை உள்ளிட்டு சரிபார்ப்பிற்காக பின்னை மீண்டும் உள்ளிடவும். சரிபார்த்தபின் UPI பின் வெற்றிகரமாக மாற்றப்படும். இதனிடையே UPI பின்னை மாற்றும்போது ​​உங்களது ஸ்மார்ட்போன் (அ) கணினியின் தேடுபொறியை புதுப்பிக்கவேண்டும்.