சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக சிறப்பித்து கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் இன்று சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அம்பேத்கரின் வெண்கல சிலை இன்று திறக்கப்பட உள்ளது. 146.5 கோடி செலவில், 125 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலையை, புதிய தலைமை செயலக வளாகத்தில் தெலங்கானா அரசு கட்டியுள்ளது. இந்த சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழா பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.