மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான பயணங்களை வழங்க அவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ் படுக்கைகளில் முன்னுரிமையை இந்திய ரயில்வே வழங்குகிறது. படுக்கை வசதி கொண்ட வகுப்பில் 4 படுக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு மிடில் பெர்த்) 3 ஏசியில் 2 படுக்கைகள் (ஒன்று கீழ் பெர்த் மற்றும் ஒரு மிடில் பெர்த்), 3இ வகுப்பில் 2 படுக்கைகள் (ஒன்று கீழ் மற்றும் ஒன்று) போன்றவை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு ஒதுக்கப்படும் என இந்திய ரயில்வேயானது தன் மண்டலங்களுக்கு மார்ச் 31 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் தனியாக (அ) சிறு குழந்தைகளுடன் பயணம் செய்யும் வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு இவ்வசதி ஏற்கனவே இருக்கிறது என்பதை ரயில் பயணிகள் கவனத்தில்கொள்ள வேண்டும். கரிப் ரத் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கீழ் பெர்த்களும், 2 மேல் பெர்த்களும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வசதிக்காக அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்தவேண்டும். மேலும் ஏசி நாற்காலி வண்டியில் 2 இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். எலும்பியல் குறைபாடுகள் இருப்பவர்கள்/பாராப்ளேஜிக் நபர்கள், எஸ்கார்ட் இல்லாமல் பயணிக்க முடியாத மன வளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்றவர்கள், முற்றிலும் காது கேளாதவர்கள், வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் தனியாக (அ) துணையுடன் பயணிக்கும் 4 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் சலுகைகளை ரயில்வே வழங்குகிறது.