இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. டெல்லியில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1, 149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. என் நிலையில் மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் டெல்லியில் 2000 படுக்கைகளை கொண்ட பெரிய மருத்துவமனை இருப்பதாகவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால் முன்னெச்சரிகையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும். டெல்லியில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும். அதன் பிறகு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இருந்தாலும் மக்கள் இதைக் கண்டு அச்சப்பட வேண்டாம் எனவும், பரோடா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.