ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கும் 28% வரி விதிக்கப்பட உள்ளது. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் அனைத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது