விஜயதசமியை முன்னிட்டு, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக பள்ளிகள் மீண்டும் தொடங்கும் தேதி குறித்து பள்ளிக்கல்வித் துறை தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பள்ளிக்கல்வித் துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் அக்டோபர் 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) அரசு விடுமுறை நாளாக இருந்தாலும், விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அன்று பள்ளிகள் திறந்து வைத்து மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 6ஆம் தேதி வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என்றும், ஆசிரியர்கள் முறையாக மாணவர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
