வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதிலிருந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தமிழக.வெற்றி கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உறுப்பினர் செயலி வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, மக்களிடம் செல். மக்களுடன் வாழ் என்ற அண்ணா சொன்னதை பின்பற்ற வேண்டும்.
ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி. வீட்டுக்கு வீடு என மக்களை சந்தித்துதான் தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். மதுரை மாநாட்டை தொடர்ந்து மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களோடு மக்களாக இருப்போம். நாம் இருக்கிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள் வெற்றி நிச்சயம் என விஜய் கூறியுள்ளார்.
