தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவருக்கு தற்போது வெள்ளி யானை விருது வழங்கப்படப்படுகிறது. அதாவது சாரண சாரணியர் இயக்கத்தின் மிக உயரிய விருது வெள்ளியானை விருது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் தேசிய ஜாம்போரி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. மேலும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அமைச்சருக்கு இந்த விருது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
