தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மூலமாக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இதில் புதிதாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விண்ணப்பங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து தகுதி வாய்ந்த பெண்களின் பட்டியல்களை வெளியிடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று திமுக கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விடுபட்ட தகுதி வாய்ந்த மகளிருக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என்றார். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார்.