பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் கடந்த 28-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்னும் ஐந்து நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ராதிகா சரத்குமார் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராதிகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்த அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
